துபாய்: ஹஜ் யாத்திரையையொட்டி மதீனா நகரில் 5 லட்சம் யாத்ரீகர்கள் குவிந்துள்ளனர். இவர்களில் 31,000 இந்தியர்களும் அடங்குவர்.
ஹஜ் யாத்ரீகர்களில் மிகப் பெரிய 3வது குழு இந்தியாதான். மதீனா நகருக்கு செவ்வாய்க்கிழமை வரை மொத்தம் 4 லட்சத்து 24 ஆயிரத்து 14 யாத்ரீகர்கள் வந்துள்ளனர்.
இவர்களில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 296 பேர் மெக்காவுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டனர். 2 லட்சத்து 58 ஆயிரத்து 660 பேர் மதீனாவில் தங்கியுள்ளனர்.
இவர்களில் இந்தோனேசியர்கள் 57 ஆயிரத்து 591 பேர் ஆவர். இவர்களுக்கு அடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 32 ஆயிரத்து 754 பேர், இந்தியர்கள் 30 ஆயிரத்து 930 பேர் ஆவர்.
மதீனாவில் உள்ள பிரின்ஸ் முகம்மது சர்வதேச விமான நிலையத்தில் இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 63 ஹஜ் யாத்திரை விமானங்கள் வந்துள்ளன.
தினசரி மதீனாவுக்கு 356 பஸ்கள் வருகின்றன. பிற நகரங்களுக்கு மதீனாவிலிருந்து 488 பஸ்கள் புறப்பட்டுச் செல்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை மெக்காவுக்குத்தான் செல்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக